×

பிரதமர் மோடியால் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறக்க வர முடிந்தது, தூத்துக்குடிக்கு வர முடியவில்லை : சீமான்

சென்னை :தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியை எடுத்துக்கொண்டு அதை எங்களுக்கே பிரித்துக் கொடுப்பதாக கூறுவதா என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “மாநில அரசின் நிதியில் தான் ஒன்றிய அரசு இயங்குகிறது; ஒன்றிய அரசுக்கென்று தனி வருவாய் கிடையாது .கூடுதல் நிதி கொடுத்திருப்பதாக கூறும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியை யாரிடம் எப்போது கொடுத்தார்?. தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியை எடுத்துக்கொண்டு அதை எங்களுக்கே பிரித்துக் கொடுப்பதாக கூறுவதா?. தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியை வைத்து ஒன்றிய அரசு நிர்வாகம் செய்யத் தெரியாதா?.

இந்தி பேசுபவர்களை மட்டும் இந்தியர்களாக நினைத்தால் மற்றவர்கள் என்ன ஆவார்கள்?. குஜராத், பீகார், உ.பி.யில் பேரிடர் காலங்களில் உடனே பார்வையிட்டு நிவாரண தொகையை ஒன்றிய அரசு அறிவிக்கிறது.பேரிடர் காலங்களில் கூட நிவாரண தொகை பெற யாசகம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பிரதமர் மோடியால் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறக்க வர முடிந்தது, தூத்துக்குடிக்கு வர முடியவில்லை. புகைப்படங்களை மட்டும் பார்த்துவிட்டு வெள்ள பாதிப்பை பார்வையிட்டதாக கூறுகிறார் ஒன்றிய அமைச்சர். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், இமெயில் போன்றவைகளிலேயே புகைப்படங்களை ஒன்றிய அமைச்சர் பார்வையிட்டிருக்கலாமே,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பிரதமர் மோடியால் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறக்க வர முடிந்தது, தூத்துக்குடிக்கு வர முடியவில்லை : சீமான் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Trichy airport ,Tuticorin ,Seeman ,CHENNAI ,Seeman Gattam ,Tamil Nadu ,Union Government ,Modi ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி